/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maanaadu_4.jpg)
இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ‘மாநாடு 2’ எடுக்கப்படுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவெங்கட் பிரபு, “நிச்சயம் ‘மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும்.தற்போது உள்ள பணிகளை முடித்த பிறகு ‘மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)